தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Tuesday 4 August 2015

பிரண்டை சூப்

உடல் ஆரோக்கியத்திற்கு நம் முன்னோர் பின்பற்றிய முறைக்கு பலர் மாறத்துவங்கியுள்ளனர். இதனால் தான் சிறுதானியங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தோட்...டம், வீடுகளில் வளர்க்க கூடிய மூலிகை செடிகளை பயன்படுத்தி வெஜ் சூப், ஜூஸ் என தயார் செய்து குடிக்கவும் துவங்கிவிட்டனர். குறைந்த செலவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் ஜூஸ், சூப் ஆகியவற்றை வீட்டிலேயே தயார் செய்து அருந்தலாம்.
இதற்கான வழிமுறையாக ‘பிரண்டை சூப்’ தயார் செய்யும் விதம் குறித்து சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த ஏ.பாக்கியவதி விளக்கினார்.
அவர் கூறியதாவது:
பிரண்டை செடி தோட்ட வேலிகளிலும், பலர் வீடுகளிலும் வளர்த்து வருகின்றனர். மருத்துவ குணம் வாய்ந்த பிரண்டையை உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. பிரண்டையை துவையல் ஆகவும், சூப் ஆகவும் தயார் செய்து பயன்படுத்தலாம். இளம் பிரண்டையை கை பிடி அளவு எடுத்து தேவையான அளவில் ஒடித்து, அதன் மேல் உள்ள தோல் பகுதியை நீக்கி, சதைப்பகுதியை தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.
வெண்ணெய் அல்லது நெய் ஒரு ஸ்பூன் விட்டு சிறிதளவு சீரகத்தை வதக்கிக்கொள்ளவேண்டும். பின் பிரண்டையுடன் மூன்று சிறுவெங்காயம், மூன்று பூண்டு, ஒரு தக்காளி சேர்த்து வதக்கவேண்டும். அதன்பின் சிறிது துவரம் பருப்பு, தேவையான அளவு தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும். நன்கு வெந்த பிறகு சக்கையை நீக்கி விட்டு சாறு எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின்
பிரியாணி இலை, இரண்டு கிராம்பு சேர்த்து இதமாக சூடு ஏற்படுத்தி நுரை வந்தவுடன் இறக்கினால் பிரண்டை சூப் ரெடி.
குடிப்பதற்கு முன் மிளகு துõள்
சிறிதளவு சேர்த்து கொள்ளலாம். உடல் வலி, வயிற்றுபுண், மூலத்திற்கும் பயன் உள்ள மருந்தாகவும் பிரண்டை சூப் உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment