தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Sunday 3 May 2015

பல் வலி நீங்கிட..!

உங்களுக்கு பல் வலி இருந்தால் அது அதிக விளைவுகளை தருவதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.. சிலருக்கு இரவு நேரங்களில் தான் பல் வலி பாடாய்படுத்தும். அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் சில இயற்கை நிவாரணிகளைக் கொண்டு பல் வலியை போக்க முயற்சி செய்யலாம். இந்த பொருட்கள் பல் வலியை போக்கி பற்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பல் வலியை போக்க சிறந்த ஆறு நிவாரணிகளை பார்க்கல...ாம்.

கிராம்பு

பல்வலியை போக்குவதில் சிறந்து விளங்கும் கிராம்பு அனைவரின் வீட்டிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. கிராம்பு பல் வலியை போக்க கூடிய எதிர்ப்பு அழற்சி, எதிப்பு பாக்டீரியா, ஆக்ஸிஜனேற்ற மற்றும் உணர்ச்சி நீக்கும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆகவே இது பல் வலிக்கு நிவாரணம் அளிக்கும் முக்கிய பண்புகளை பெற்றுள்ளதால் கிராம்பை பல்வலிக்கு பயன்படுத்தலாம்.

கிராம்பு எண்ணெய்யை ஒரு காட்டன் துணி கொண்டு நனைத்து பல் வலி ஏற்படும் இடத்தில் சிறிது நேரத்திற்கு வைக்க வேண்டும். இப்படி செய்தால் பல் வலி குணம் பெறும். பல் வலியால் அவதி படுபவர்கள் அரை தம்ளர் தண்ணீரில் சிறிதளவு கிராம்பு எண்ணெய்யை ஒரு சில துளிகள் கலந்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மேலும் முழு கிராம்பை அரைத்து சிறிது கிராம்பு எண்ணெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பல்லின் மேல் தடவி வைத்தால் பல் வலி தீரும்.

பூண்டு

பூண்டை பயன்படுத்தினாலும் பல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.பூண்டு ஆண்டிபயாடிக் பண்புகள் மற்றும் பிறமருத்துவ குணங்களைகொண்டுள்ளது. இது பாக்டீரியா பாதிப்பில் உள்ள பகுதிகளை பாதிப்பிலிருந்து குறைக்கும் ஆற்றல் கொண்டது..

வெறுமனே பூண்டையும், கிராம்பையும் சேர்த்து நசுக்கி சில துளிகள் உப்பு சேர்த்து பல் வலி உள்ள இடத்தில் தடவினால் பல் வலி குணம் பெறும். மேலும் பூண்டையும் கிராம்பையும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.. இப்படி செய்வது பற்களுக்கு தரும் இயற்கை சிகிச்சையாகும்.

வெங்காயம்

வெங்காயம் பல் வலியை குணப்படுத்தக்கூடிய கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. பல் வலி வரப்போகிறது என அறிந்ததும் ஒரு முழு வெங்காயத்தை எடுத்து வாயிலிட்டு சுவைக்க தொடங்குங்கள். உங்களால் மெல்ல முடியவில்லையெனில் வெங்காயத்தை பசை போல அரைத்து பற்களின் மேல் தடவி வைக்க வேண்டும். இப்படி செய்தால் பற்களில் உள்ள கிருமிகளை கொன்று சில நிமிடங்களில் பற்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

கொய்யா இலைகள்

கொய்யா இலைகளும் பல் வலியை தீர்க்கும். பாதிக்கப்பட்ட பல் வேலை செய்ய தொடங்குவதற்கு முன்பு வலி வரப்போவது என அறிந்ததும் ப்ரெஷ்சான ஒன்று இரண்டு கொய்யா இலைகளை வாயில் விட்டு மென்று விடலாம். மேலும் ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பானதும் சில துளி உப்பு சேர்த்து வாய்களை சுத்தம் செய்யலாம். கொய்யா இலைகள் இல்லையெனில் பச்சை கீரைகளை பயன்படுத்தலாம். இவை இரண்டுமே பல் வலியை குணப்படுத்தும் சிறந்த மருந்து.

மிளகு மற்றும் உப்பு

மிளகு கலந்த உப்பு கூட வீட்டில் பல் வலியை கையாள சிறந்த மருந்தாகும். இது பல் வலிக்கு பயன் பெறக்கூடிய மிகச்சிறந்த மருந்தாகும். சம அளவு மிளகு, உப்பு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட பற்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். இந்தமுறையை தினமும் சில நாட்களுக்கு செய்து வந்தால் பல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.மேலும் பல் வலியை போக்க பெருங்காயம், ஐஸ் கியூப், பே பெர்ரி, சூடான உப்பு நீர் ஆகியவற்றைக் கொண்டும் பல்வலியை போக்கிகொள்ளலாம்.

No comments:

Post a Comment