தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Friday 24 April 2015

மிதமான வயிற்று போக்கு மற்றும் வாயு பிரச்சனைகளுக்கு


நோய் அணுகா விதி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்
காலை மாலை இருவேளை மலம் கழித்தல் நன்று. காலை மட்டுமாவது மலம் கழித்தல் இன்றி அமையாதது. இல்லையென்றால் குடலுக்குள் வாயு எனப்படும் வளி கூடி குடற்பை பருக்கும். இது நாளடைவில் குடலுக்கு கீழ் புறத்தில் உள்ள சவ்வு சிறிது வழி விடும் படியாக துளை உண்டாக்கும். அக்காலத்தில் விரைவான நடையும் மலச்சிக்கலும் குடல் கீழே இறங்கும். (இதுவே "எரனியா" என்ற குடலிறக்க நோயாகும்). இவ்வாறு உணவு உண்டபின் விர...ைவாக நடந்தாலோ உடற் பயிற்சி செய்தாலோ உடலுக்கு நன்மைக்கு மாறாக தீமையே விளையும். எனவே தான் உண்டபின்னர் மெதுவாக நடத்தல் தேவையென சித்தர்கள் கூறி உள்ளனர்.
" நன்பு பெற உண்ட பின் குருனடையும் கொள்வோம்" 10 மணித் துளிகள் நடந்தாலே போதும். இரவு 7-8 மணிக்குள் உண்டு (2 மணிநேரமாவது இடைவெளி) 10 மணிக்குள், படுக்க செல்வது நல்லது.
"பகற் தூக்கம் வளிப்பெருக்கம் " என்பர். என்றாலும் இரவு பணி செய்பவர்கள் பகலில் தான் தூங்க வேண்டி இருக்கும். எனவே தூக்கம் எனபது ஒரே முறையாக 6-7 மணி நேரம் என அமைத்துக் கொள்வதே சிறந்தது.அவ்வாறே உடற் பயிற்சியும் விரைவான நடையும் வெறும் வயிற்றில் மட்டுமே இருத்தல் தேவை. காலை வெறும் வயிற்றில் 2 குவளை தண்ணீர் அருந்தி வர மலம் எளிதாக வெளியேறும்.
மலச்சிக்கல் இல்லை என்றாலும் 4 மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக் கொள்வது நல்லது.
"அடர் நான்கு மதிக்கொரு கால் பேதியுறை நுகர்வோம்"
இதனால் வளி நோய்கள் குறையும்.
முதலில் எளிமையான மருந்து பார்ப்போம்.
கடுக்காய் பொடி - 2 தேக்கரண்டி
லவங்கம் - 4 எண்ணிக்கை
நெய் - 3 தேக்கரண்டி
முதலில் 300 மில்லி தண்ணீர் எடுத்துக்கொண்டு கடுக்காய் பொடி 2 தேக்கரண்டி போட்டு லவங்கம் 4 எண்ணிக்கை லவங்கத்தில் உள்ள தலையை நீக்கி ஒன்று இரண்டாக இடித்து 300 மில்லி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த 300 மில்லி தண்ணீர் 200 மில்லியாக குறையும் அளவுக்கு கொதிக்க வைக்க வேண்டும். 200மில்லியாக சுருக்கிய பிறகு நன்றாக வடிகட்டி 3 தேக்கரண்டி நெய் கலந்து வெது வெதுப்பான சூட்டில் சாப்பிட வேண்டும்.
சும்மார் ஒரு மணி நேரம் பிறகு மிதமான வயிற்று போக்கு (பேதி) ஏற்படும். இரண்டு முறை அல்லது மூன்று முறை வரை தான் ஏற்படும். இது பக்க விளைவு இல்லாத முறை.

No comments:

Post a Comment