தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Monday 27 April 2015

கண்





கண்வலி குறைய:

1.வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்....
2.கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.
3.புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.
4.பருப்பை வேகவைத்து அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்து சாப்பிட்டால் கண்வலி குறையும்.

கண்நோய்கள் குறைய:

1.அறுகம்புல் சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், ஆகியவற்றை இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெய்யிலில் வைத்து தலையில் தடவி வரக் கண்நோய்கள் வராமல் தடுக்கலாம்.
2.எள் செடியின் பூவை நன்கு சுத்தம் செய்து, சாப்பிட்டு வர கண்நோய்கள் குறையும்.
3.மஞ்சளை நீரில் கலக்கி ஒரு சுத்தமான துணியை நனைத்து காய வைத்து கண்களை துடைத்து வந்தால் கண் நோய்கள் வராது.
4.விதை முற்றாத அவரை பிஞ்சை சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் நோய் குறையும்.
5.வில்வ மரத்தின் இளந்தளிரை வதக்கி கண்களின் மேல் வைத்துக் கட்டி வந்தால் கண் நோய்கள் குறையும்.
அறிகுறிகள்:கண் பார்வை மங்கல்.கண்வலி.கண் எரிச்சல்.

கண்ணில் கட்டி குறைய‌:

1.பன்னீரில் மரமஞ்சள், மஞ்சள் மற்றும் படிகாரம் ஆகியவற்றை கலந்து இரவு ஊற வைத்து காலையில் வடிகட்டி அந்த நீரை கொண்டு முகம், கண்கள் ஆகியவற்றை கழுவி வந்தால் கண்ணில் ஏற்படும் கட்டிகள் குறைந்து கண் சிவப்பு, கண் வலி ஆகியவை குறையும்.
2.சோற்றுக் கற்றாழை தோலைச் சீவி அதன் ஜெல்லை வைத்து கட்ட கண்ணில் கட்டி குறையும்.
(செய்முறை: சோற்றுக் கற்றாழை தோலைச்சீவி அதன் சிறிது ஜெல்லை தண்ணிரில் கழுவி கண் இமைகளுக்கு மேலே வைத்து கட்டி 5 நிமிடம் கழித்து எடுக்க கண்ணில் கட்டி, கண் வலி குறையும்.)
3.வாகை மர ‌விதையை தண்ணீ‌ரி‌ல் உரை‌த்து க‌ண் க‌ட்டிகள் மீது பூ‌சி வர க‌ண் க‌ட்டிக‌ள் கரையு‌ம்.
4.30 கிராம் சிறுகீரை வேர், 30 கிராம் பொன்னாங்காணி வேர், 30 கிராம் புளியம்பூ, 30 கிராம் திப்பிலி ஆகியவற்றை எலுமிச்சம்பழச் சாற்றில் மைபோல் அரைத்து மாத்திரை போல் உருட்டி காய வைத்து எலுமிச்சம்பழச் சாற்றில் உரைத்து கண் கட்டியின் மீது போட்டால் கண் கட்டி குறையும்.

கண்ணெரிச்சல் குறைய‌:

மிளகு, கசகசா, நெல்லி வற்றல் ஆகியவற்றை பசும்பாலில் ஊறவைத்து நன்றாகஅரைத்து குளிக்கப் போகும் முன் தலையில் தேய்த்து இளஞ்சூடான வெந்நீரில் தலை கழுவினால் கண்ணெரிச்சல் குறையும்.
கண் புகைச்சல் குறைய.
சிறுகீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் செய்து சாப்பிட கண் புகைச்சல் குறையும்.

கண் சிவப்பு குறைய:

செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய்,குங்குமப்பூ ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிந்த நீரில் கழுவ கண் சிவப்பு குறையும்.

கண் குளிர்ச்சி அடைய:

ஒரு க‌ர‌ண்டி சீர‌கத்தை கருவக் கொழுந்துடன் அரைத்து அடையாகத் தட்டி அதன் நடுவில் சிறிய துவாரம் செய்து கண்ணில் வைத்து அதன் மேல் துணி வைத்துக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டால் கண் குளிச்சி அடையும்.

No comments:

Post a Comment