தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Sunday 17 May 2015

விரலைச் சுழற்றினால் தலைவலி மாயமாகும் வர்மசிகிச்சை !


இதுவரை பொருத்தமான மருந்து கண்டுபிடிக்கப்படாத கொடிய நோய்களில் ஒன்று, சாதாரண தலைவலிதான் என்றால் ஒப்புக் கொள்வீர்களா? ஆனால், அது உண்மை! தலைவலிக்கு இதுதான் நிவாரணம் தரும் என்று துல்லியமான மாத்திரையோ, மருந்தோ கிடையாது. கையில் கிடைக்கும் மாத்திரையைப் போட்டுக் கொள்வது, கிடைத்த தைலத்தைத் தேய்த்துக் கொள்வது... அவை தரும் பக்க விளைவுகளால் தலைவலி சரியானது போல் தோன்றுவது. இதுதான் இதுவரையில் நமக்குத் தெரிந்த தலைவலி சிகிச்சை.
‘இந்த தலைவலியோடு பெரிய தலைவலியாப் போச்சே’ என்று சர்வதேச மருத்துவ சமூகமே மிரள்கிறது. காரணம், தலைவலி மருந்துகள் தரும் ஏராளமான பக்க விளைவுகள்! ஒருவழியாக ஆராய்ச்சிகளைத் துரிதப்படுத்தியதில் சமீபத்தில் முதல்கட்டமாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது, ‘வலி நிவாரணி மருந்து மாத்திரைகளை விட, மூளையிலிருந்து சுரக்கும் இயற்கையான சுரப்புகள் தலைவலியை விரைவில் குணப்படுத்துகின்றன’ என்பதுதான் அந்த விஷயம். ‘எண்டார்ஃபின் தியரி’ மூலம் இது நிரூபணமாகி இருக்கிறது.
மருந்து, மாத்திரைகளை யாரும் ஆசையோடு எடுத்துக்கொள்வதில்லை. வலியின் கொடுமை பொறுக்க மாட்டாமல், ‘அந்த நேரத்துக்குத் தப்பித்தால் போதும்’ என்றுதான் உட்கொள்கிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்... தலைவலி ஒன்றும் அதிபயங்கரமான பிரச்னை இல்லை. கொசு வந்து கையில் அமர்ந்தால் தட்டி விடுகிறோமே.. அந்த வினாடிப் பொழுதுகள் போதும், தலைவலியை விரட்டுவதற்கும்!
‘பிறகு எதற்கு நாள்கணக்கில், மாதக்கணக்கில் சிலர் அவஸ்தைப்பட நேர்கிறது’ என்கிற கேள்வி உங்களுக்கு நிச்சயம் எழும். எந்தவொரு நோய்க்கும் அது உண்டானதற்கான மூல காரணத்தைக் கண்டறிந்து, அங்கே இருந்து சிகிச்சையைத் தொடங்காவிட்டால் இப்படிப்பட்ட விளைவுகள்தான் மிஞ்சும்.
ஆனால், அக்குபிரஷரில் நேர்த்தியாகச் செய்யப்படுகிறது அந்த வேலை. ‘எண்டார்ஃபின் தியரி’ப்படி, மூளையில் உருவாகும் இயல்பான சுரப்புகளைத் தூண்டுவதில் வர்ம புள்ளிகள் கில்லாடிகள். தொடர்ச்சியான அக்கு சிகிச்சை, நீண்டகாலத் தீர்வாக இந்தச் சுரப்புகளை ஊக்குவிக்கிறது. அப்படியானால் இன்று வாட்டி எடுக்கும் தலைவலிக்கு உடனடித் தீர்வு கிடைக்காதா என்கிறீர்களா? கிடைக்கும். வர்ம புள்ளிகளிடம் அதற்கும் இருக்கிறது வர்மசிகிச்சை. எப்படி எனப் பார்க்கலாமா...
தலைவலிகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். டென்ஷனால் ஏற்படும் தலைவலி, பித்த தலைவலி, அஜீரணத் தலைவலி, சைனஸ் தலைவலி என காரணத்தின் அடிப்படையில் தலைவலி வகைப்படுத்தப்படுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டிய புதிய வகை தலைவலிகூட எதிர்காலத்தில் வரலாம்.
வர்ம நாடிப் பரிசோதனை மூலம் ஒரு தலைவலி ஏற்படுவதற்கான காரணம், அதன் தீவிரம் என மொத்த ஜாதகத்தையே திரட்டி விடலாம். அடுத்தது, எளிமையான சிகிச்சை. வர்ம சிகிச்சையை ஏனோதானோவென்று இல்லாமல், நிதானமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் எடுக்க வேண்டிய சிம்பிள் சிகிச்சைகள் இங்கே...
தி.தலைவலியின் அறிகுறி தெரிந்ததுமே, வலது கை கட்டை விரலை இடது கையின் 5 விரல்களாலும் சேர்த்துப் பிடித்து, 30 முறை சுழற்றுங்கள். இதேபோல இடது கை கட்டை விரலை வலது கையின் மொத்த விரல்களாலும் 30 முறை சுழற்றுங்கள். சாதாரண தலைவலி இதில் நிச்சயம் பறந்துவிடும். வெறும் விரல்களால் சுழற்றுவதற்குப் பதில் ‘சூஜோக் ரிங்’ எனப்படும் வண்ண வளையம் கொண்டு சுழற்றியும் இந்த சிகிச்சையைச் செய்யலாம்.
திஏதாவது ஒரு பக்கமாக வலி வாட்டி எடுத்து, கூடவே வாந்தியும் ஏற்படுகிறது என்றால் அது பித்தத் தலைவலி. வாந்தி எடுத்து முடித்த மறுவினாடியே தலைவலி குறைந்தது போல் இருக்கும். பித்த நீர்ப்பையின் சக்தியோட்டம் நார்மலாக இல்லாத போது வரும் தலைவலி இது. இதை குணப்படுத்துவதற்கு இரண்டே உபகரணங்கள்தான் தேவை. ஒன்று, சாதாரண ரப்பர் பேண்ட். இரண்டு, துணிகளைக் காயப்போட பயன்படுத்தும் மர கிளிப்புகள். முதலில் ரப்பர் பேண்டால் ஆள்காட்டி மற்றும் நடு விரல் ஆகிய இரண்டையும் இறுக்கமாகப் பிணைத்து விட வேண்டும். உடனே கட்டை விரலின் அடிப்புற மற்றும் மைய ஏரியாவை கிளிப்பின் கன்ட்ரோலுக்குள் கொண்டு வர வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து ரப்பர் பேண்டையும் கிளிப்பையும் அகற்றிவிட வேண்டும்.
திஅஜீரணத்தால் உண்டாகும் தலைவலிக்கு இதில் சின்ன மாற்றம். இங்கு ரப்பரால் இணைக்கப்பட வேண்டியது மோதிர விரலும் சுண்டு விரலும். இந்த சிகிச்சையைத் தொடர்ந்து, கையின் மேற்பகுதியில் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சந்திக்கிற ஜங்ஷன், முழங்கைக்குக் கொஞ்சம் மேலே, மற்றும் கண் புருவங்களில் நடுப்பகுதி என இந்த மூன்று இடங்களில் விரலால் ஓரளவு இதமாக அழுத்தினாலே போதும்.
தலைவலியோடு காய்ச்சலும் சேர்ந்து கொண்டால், இந்த சிகிச்சையினூடே வலது புறம் திரும்பி 5 நிமிடங்கள் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். இதுவும் சிகிச்சையின் ஒரு பகுதியே.
சிகிச்சை முறையைத் தெரிந்துகொண்டீர்கள். அடுத்த முறை தலை வலித்தால் நீங்களாகவே சிகிச்சையை ஆரம்பித்து விடலாம்தானே? தப்பில்லை. ஏனென்றால், இந்த எளிய சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏதும் வந்துவிடப் போவதில்லை.
ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்
தலைவலி இல்லாதவர்கள் கூட, கட்டை விரலைச் சுழற்றுவதை தினந்தோறும் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாகவே செய்து வரலாம். எதிர்காலத் தலைவலியை இது தடுக்கும்!
தூக்கம், பசி இரண்டும் தலைவலியைத் தூண்டுகிற முக்கியக் காரணிகள். சிகிச்சை நல்ல பலன் தர வேண்டும் என்றால், போதுமான உறக்கம் அவசியம். சரியான நேரத்தில் சரியான அளவு உணவு உட்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment