தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Saturday 30 May 2015

தூக்கமின்மை எளிய தீர்வு


காலை, மாலை என இரண்டு வேளையும் பத்து நிமிடங்கள் படத்தில் காட்டி இருப்பது போல அழுத்தம் கொடுத்து வர தூக்கமின்மை குறையும்.
வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.
...

திப்பிலி கொடியின் வேரை எடுத்து இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து தினமும் படுக்கும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

லெட்டூஸ் கீரைகளின் விதைகளை எடுத்து 2 டம்ளர் நீர் விட்டு பாதியாக வரும் வரை சுண்ட காய்ச்சி இரவு குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்

வேப்பம் இலைகளை எடுத்து நன்கு வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கி வந்தால் நிம்மதியான தூக்கம் வரும்

ஒரு தேக்கரண்டி அளவு சோம்பை எடுத்து அதில் 250 மில்லி தண்ணீர் விட்டு நன்கு மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு பால் மற்றும் தேன் கலந்து படுக்க போகும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

No comments:

Post a Comment