தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Sunday 17 May 2015

சுகப்பிரசவம் வேண்டுமா வர்மசிகிச்சை !!!


வர்மசிகிச்சை மரபு நோய்களைத் தடுக்கும் வல்லமை பெற்றவை. பிரசவ காலத்தில் பெண்கள் எல்லா வகையான வர்மசிகிச்சைகளையும் செய்துவந்தால் இந்தப் பலனைப் பெறலாம். அதே நேரம், கர்ப்பப் பை மற்றும் சினைப் பைகளை வலுப்படுத்தும் வர்மபுள்ளிகளையும் தொடர்ந்து தூண்டி வந்தால், அது பிரசவத்தின்போது கைகொடுக்கும். தொப்புளுக்கு மூன்று இன்ச் கீழே விரவியுள்ளது அந்த வர்மபுள்ளி. அதேபோல் கால்களின் உள்பக்கப் புள்ளிகள் பெண்ணின் இடுப்புப் பகுதியின் அனைத்து உறுப்புகளுக்கும் ச...க்தியூட்டுகின்றன. எனவே கர்ப்பம், மற்றும் பிரசவ கால பிரச்னைகளுக்கு இந்தப் பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் தந்து நிவாரணம் பெறலாம்.
தூக்கம் வருவது, பசிப்பது போல் பெண்களுக்கு பிரசவமும் ஒரு இயற்கை நிகழ்வே. நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பிருந்தாலும் இன்று கத்தரி எடுக்கிறார்கள். மேலே சொன்ன வர்மசிகிச்சைகளைத் தொடர்ந்து எடுத்து வந்தவர்கள், பிரசவ அறைக்குச் செல்லும்போது தைரியமாகச் செல்லலாம். கடினமான பிரசவத்தையும் சுகப்பிரசவம் ஆக்கித்தரும் சூட்சுமம் இந்தப் பயிற்சிகளில் உண்டு. ஆனாலும் பதற்றம், படபடப்பு இருந்தால், வர்ம மருத்துவத்தில் அவசரகாலப் பயிற்சிகள் உள்ளன. சம்பந்தப்பட்ட உடலுறுப்புகளை அவை தூண்டி, பிரசவத்தை நல்லபடியாக முடித்து வைக்கின்றன.
இந்தப் பயிற்சிக்கான உபகரணங்கள் எவை என்றால் ஆச்சரியப்படுவீர்கள். இரண்டு சீப்புகள் மற்றும் ஒரு மெட்டல் ஸ்பூன். தொடரின் ஆரம்பத்திலேயே சொன்னதுபோல் வர்மசிகிச்சையில் உள்ளங்கைதான் டோட்டல் பவர். எனவே இரு உள்ளங்கைக்குள்ளும் இரண்டு சீப்புகளை வைத்து மிதமான அழுத்தம் தர வேண்டும். கூடவே, தாயின் நாக்கை முடிந்த அளவு வெளியே நீட்டி அதன் நுனியில் ஸ்பூனைக் கவிழ்த்து, மூன்று நிமிடத்துக்கொரு முறை விட்டுவிட்டு அழுத்தி வந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தை நல்லபடியாக பூமியைத் தொட்டு விடும்.
See More

No comments:

Post a Comment