தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Thursday 7 May 2015

ஆண்மைக்குறைபாட்டை போக்கும் தொட்டாற்சுருங்கி:

உணவே மருந்து's photo.

தொட்டாற்சுருங்கி தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. தெய்வீக மூலிகை ‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது.

மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருக...ில் செல்லக் கூடாது. இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும்.

சிறுநீர் கல் கரையும். தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும்.

இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். ஆண்மை பெருகும். ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும்.

இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.

இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும்

No comments:

Post a Comment